Thursday, May 19, 2011

வியர்வை இனிக்கும் நாள் நோக்கி.......

சிந்திய வியர்வையெல்லாம் இனித்திருந்தால்
இந்தியாவில் இன்று சர்க்கரைக்குப் பஞ்சம் இருக்காது.
மலிவு விலையில் வியர்வை.
விவசாயிகளின் வியர்வையெல்லாம்
விஜய் மல்லயாக்களின்  வீடுகளில்  விருந்தாய்.
வியர்வை ஏற்றுமதி செய்கிறோம் நாம்; கடல் கடந்த கணிப்பொறியாலர்களாய்.
நாடெங்கும் பல புதிய கிழக்கிந்திய கம்பெனிகள்.
மிளகு வாங்க வரவில்லை. இம்முறை  மலிவு விலை வியர்வைக்காக.
வல்லரசு ஆகிவிட்டோம் வியர்வை விற்று.
சிந்தியவனுக்கு மிஞ்சியது என்னவோ உவர்ப்பு  மட்டும்தான்.
இனி இனிப்பது எப்போது.

முடிந்தால்......

உன் சுற்றம்  தன் மதியிழந்து, தான் மதிகெட்ட காரணம் நீயென
பொய்யுரைத்த  பின்னும், நீ சிந்தையிழக்காத்திருந்தால்.
அச்சுற்றம்  உன்மேல் ஐயம் கொண்ட போதிலும், தன் உறுதி காத்திருந்தால்.
அவ்வையத்திற்கு  இணக்கமும் தர இயன்றால்.
உன்னால் காத்திருக்கமுடிந்தால், அதனால் சோர்வடையாதிருந்தால் .
உன்மேல் பொய்கள் கூறப்பட்டும், வாய்மை வழி நடந்தால்.
தான் வெறுக்கப்பட்டாலும், உன் சுற்றத்தை வெறுக்காதிருந்தால்.
இவையனைத்தும் உன்னால் முடியுமாயின், அவர் கண்கட்கு
நீ மிக பண்பாளனாக தெரியாமலும், பெரும் பண்டிதன்  என மொழியாதிருந்தால்....

Translation of Rudyard Kipling's 'If....'

Wednesday, May 4, 2011

Elina at the Bull Wall, Dublin

I found this place (the Bull Wall) in Dublin only weeks ago after all these years. Ever since, fell in love with this place and wanted to do a photoshoot here, but had a to fight few odds on the day: mid day sun, wind and the reluctant reflector (good work Amanda!!). Thanks Elina !!!